இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இந்த வருட இறுதியில் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘புலம்பெயர்ந்தோரை ஒருங்கிணைப்பதற்கான விழா’வுக்கு எந்தவிதமான நிதியுதவியையும் வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அறிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை ஒருங்கிணைப்பதற்கான விழாவுக்கு ஐக்கிய நாடுகள் நிதி வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்று ஐக்கிய நாடுக்ள மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ருப்பர் கொல்வின் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோரை ஒருங்கிணைப்பதற்கான விழாவை நடத்த இடங்கொடுக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டிப்பதாகவும், இந்த நிகழ்வுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக தெரியவந்துள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த விழாவுக்கு நிதி வழங்குவதன் பின்னாலுள்ள காரணம் பாரதூரமான சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனினும், இலங்கை புலம் பெயர்ந்தோர் சமுதாயம், அரசாங்கத்துடன் கூடிச் செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு செய்ய ஓர் உத்தியோக பூர்வ ஏற்பாட்டை உருவாக்க இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.

0 Responses to இலங்கையின் புலம்பெயர்ந்தோருக்கான விழாவுக்கு நிதி வழங்கவில்லை: ஐ.நா