எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெயரிடப்பட்டால், தான் அரசியலை விட்டு விலகுவேன் என்று அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மைத்திரி - மஹிந்தவை இணைப்பதற்காக செயற்படும் உறுப்பினர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியின் முறை கேடுகள் குறித்து மக்களுக்கு வெளிப்படுத்தி, அவரை தோற்கடித்துவிட்டு, மீண்டும் அவருக்கு புகழ் பாடுவதற்காக தான் அரசியல் மேடைகளில் ஏறப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக்ஷர்களுக்கு எதிராக கதைத்துவிட்டே நாங்கள் இவ்விடத்திற்கு வந்தோம். மைத்திரியுடன் இணைந்து மேடைகளில் ஏறி ராஜபக்ஷர்களை துரத்துவோம் என கூறியுள்ளேன். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மைத்திரி- மஹிந்தவை இணைக்கும் இடத்தில் கெளரவமாக செயற்பட முடியுமா?, அப்படி மஹிந்தவை பிரதமராக்கும் நிலை வந்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்” என்று ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.




0 Responses to பிரதமர் வேட்பாளராக மஹிந்த பெயரிடப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவேன்: ராஜித சேனாரத்ன