Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் இணையக்குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையினில் அதனை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றம் புரியும் நெற்கபேகள் இழுத்து மூடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை உயரதிகாரிகளுக்கு யாழ்.மேல்நீதிமன்று பணித்துள்ளது.

தவிர 18 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோரின்றி நெற்கபேக்களுக்கு வருவார்களாயின் அவர்களுக்கு அனுமதி  வழங்கக் கூடாது என்ற நடைமுறையை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறும் மேல் நீதிமன்று அறிவுறுத்தியுள்ளது.   மீறி அனுமதி வழங்கும் நெற்கபேக்களை இழுத்து மூடவும் அதன் நடத்துநர்களைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மல்லாகம் நீதிமன்ற வழக்கு ஒன்று தொடர்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் வழங்கிய கட்டளையிலேயே நீதிபதி மா.இளஞ்செழியன் காவல்துறைக்கு  இந்த இறுக்கமான பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

குற்றங்கள் புரியும் நெற்கபேக்களை புலனாய்வு மூலமாகக் கண்காணித்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.     குற்றம் புரிபவர்களைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவதுடன் நெற்கபேக்களை மூடுவதற்கு வேண்டிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ,மாணவி யாரையும் நெற்கபேக்களுள் தனியாக அனுமதிக்கக் கூடாது.ஆசிரியர் பெற்றோருடன் வரும் போது மாத்திரமே அனுமதிக்க வேண்டும்.

காதலர்களின் பொழுது போக்கிடமாக இயங்க நெற்கபேக்களை அனுமதிக்கக் கூடாது. புலனாய்வு மூலம் நெற்கபேக்கள் கண்காணிக்கப்பட்டு சைபர் குற்றங்கள் புரிகிறார்களா என்பதனை அவதானித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெற்கபேக்களில் அறிவியற்புரட்சித் தகவல்களைத் தரவிறக்கம் செய்வதனை விட யாழ்ப்பாணத்தில் பாலியல் ரீதியான தகவல்களில் அதிகளவில் தரவிறக்கம் செய்யப்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்த நீதிமன்ற உத்தரவுகள் மூலமாக நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றுக்குத் துணைபோகும் நெற்கபேக்கள் சட்டரீதியாக இயங்குகின்றனவா?சட்டரீதியான பதிவுகளுடன் இயங்குகின்றனவா? இணையக்குற்றங்கள் புரிகின்றனவா? என்பவற்றை  கண்காணிக்க வேண்டும்.   குற்றம் புரியும் நெற்கபேக்களை நீதிமன்ற உத்தரவின்படி இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பளை பகுதியினில் பல்கலைக்கழக மாணவியொருத்தி இத்தகைய இணைய வழி குற்றச்செயல்காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடக்கினில் இணைய வழி குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com