Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைக்கும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்ட விசேட இணைப்புக்குழு நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் சந்திப்பொன்றில் கலந்து கொண்டது.

விசேட இணைப்புக்குழு அமைக்கப்பட்டதும், நேற்றுத்தான் முதற்தடவையாக ஜனாதிபதியுடன் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும், அந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் வரை நீண்டதாகவும் அந்தக் குழுவின் தலைவர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி போதிய ஆலோசனைகளை வழங்கியதாகவும், சுமூகமான முறையில் உரையாடியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளாராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட மாட்டாரென்னும், வேட்புமனுவோ, தேசியப் பட்டியலிலோ இடம் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துகள் பொய்யானது என்றும் ஜோன் செனவிரட்ன கூறியுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி மைத்திரி- மஹிந்த இணைப்புக்கான விசேட குழு ஜனாதிபதியைச் சந்தித்தது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com