Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று நவசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நேற்று வெளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரமபாகு கருணாரட்ன கூறியுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டு மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம். அதன் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷ எந்த வழிமுறைகளுடாகவும் அரசியலுக்குள் வரவழைக்க முடியாது என கருத்துக் கூறியிருக்கின்றார். அதற்கு எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றோம். மிகவும் சர்வாதிகாரமான போக்கு கொண்ட மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு இடமளிக்க கூடாது. இந்த நாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரிடமும் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.

20வது திருத்தத்தினை ஆதரிக்கும் அதேநேரம், விகிதாரசார முறை நீக்கப்படலாம், இதுவரை ஜனநாயக ரீதியாக அனுபவித்தவற்றினை நாம் இழப்பதாகவோ, அல்லது விட்டுக் கொடுப்பதாகவோ அமையாது. பாராளுமன்றத்தின் காலம் முடிவடைந்து விட்டது. பாராளுமன்றம் கலைக்கபட்டு, பொதுத் தேர்தல் நடைபெற்றால், அந்த தேர்தலை எதிர்கொள்ளவும், அடுத்த அரசாங்கத்தினை உருவாக்கவும் தொடர்ந்தும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார போக்கினை ஒழித்துக் கட்டுவதற்காகவே, நவசமாஜக்கட்சி ஏனைய அனைத்து கட்சியுடன் இணைந்து செயலாற்றி மைத்திரிபால சிறிசேனாவை ஆட்சிக்கு கொண்டு வந்தது. தேசிய நிறைவேற்று குழுவில் அங்கம் வகித்த போதும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான முழு அழுத்தங்களையும் கொடுத்துள்ளோம். ” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு இடமளியோம்: விக்கிரமபாகு கருணாரட்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com