Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று ஆம் ஆத்மித் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிதித்துறை மோசடியில் ஈடுபட்டு, அமலாக்கப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான லலித் மோடிக்கு சுஷ்மா உதவி செய்ததாகக் கூறப்படும் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகக் கிளம்பி வருகிறது. இந்நிலையில் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து டெல்லியில் உள்ள சுஷ்மா இல்லத்தை ஆம் ஆத்மி தொண்டர்கள் முற்றுகையிடும் போராட்டத்தைத் துவங்கினர்.

போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் நிறுத்திய இடத்தில் நின்றபடி ஆம் ஆத்மி தொண்டர்கள் சுஷ்மா பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Responses to சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று ஆம் ஆத்மி போராட்டம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com