சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டோர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கான பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேன்முறையீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து விட்டதாக கூறினார். உச்சநீதிமன்றத்தில் வாதிட நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் மேன்முறையீட்டு மனுவை தயாரித்து வருவதாகவும் ஜெயசந்திரா குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 11ஆம் திகதி தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்படும் என அறிவித்த கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட வழக்கிறிஞர்களையும் நியமித்தது. இந்நிலையில் ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் என கர்நாடக அரசு கூறியிருப்பதால் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து ஒரு வாரத்துக்குள் மேன்முறையீடு: கர்நாடக அரசு