பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் நேற்றை (புதன்கிழமை) பாராளுமன்ற அமர்வின் போது கோரிக்கை விடுத்தன.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.
பிரதமரின் பதில் தொடர்பில் திருப்தியளிக்காத தினேஷ் குணவர்தன, தனது கேள்விக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தினால் மக்களின் தீர்ப்பு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தை கலைத்துப் பொதுத் தேர்தல் நடத்த வேண்டுமென பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவோம் என்றார். எதிர்த்தரப்பினர் அதற்கான பிரேரணையை கொண்டு வருமாறும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக எதிர்தரப்பில் உறுப்பினர்கள் சிலர் ஆதரவாக எழுந்து நின்றனர்.
அவர்களை தொடர்ந்து ஆளும் தரப்பிலும் அமைச்சர்கள், உறுப்பினர்களும் எழுந்து நின்றனர். அதனையடுத்து இரு தரப்பிலும் மேலும் பலர் தேர்தல் நடத்துமாறு கோரி எழுந்து நின்றார்கள்.
பிரதமர் உட்பட ஆளும் தரப்பில் பெரும்பாலானவர்கள் எழுந்து நின்ற போதும் எதிர்தரப்பில் முன்வரிசையிலிருந்த எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, வாசுதேவ நாணயக்கார, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் போன்றவர்கள் எழுந்து நிற்கவில்லை.
தேர்தல் நடத்துவதை ஆதரிக்கும் சகலரும் எழுந்து நிற்குமாறு சபை முதல்வர் தெரிவித்தார். இதன் போது, கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, சகலரும் ஏன் எழுந்து நிற்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோருகின்றனர். நானும் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோருகின்றேன் என்றார். அதனைத் தொடர்ந்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அமர்ந்து கொண்டார்கள்.

0 Responses to பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கோரிக்கை; சபாநாயகரும் விருப்பம் தெரிவிப்பு!