Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி (Maggi) நூடுல்ஸை வீரர்கள் யாரும் சாப்பிட வேண்டாம் என்று இந்திய இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இராணுவ வீரர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் மேகி நூடுல்ஸை சாப்பிட வேண்டாம். இராணுவ கேன்டீன்களிலும் நூடுல்ஸை விற்பனை செய்யவும் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மிகப்பெரிய வணிக நிறுவனமாக திகழும் பிக் பஜார், மேகி விற்பனையை புதன்கிழமை முதல் நிறுத்தியுள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மசாலா உணவுப் பொருளில் காரீயம், மோனோசோடியம் குளுட்டாமேட் ஆகிய வேதிப்பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக உத்தரப் பிரதேச மாநில உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் நெஸ்லே நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மேகி நூடுல்ஸ் சாப்பிட வேண்டாம்; வீரர்களுக்கு இந்திய இராணுவம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com