ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், சிறுபான்மை மக்களைப் பாதிக்கக்கூடிய 20வது திருத்த சட்டத்தை அப்படியே நடைமுறைக்கு கொண்டு வந்தால், நாம் அனைவரும் இணைந்து எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடபிராந்திய உதவிப்பொதுமுகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் இன்று திங்கட்கிழமை யாழ்.பண்ணைப் பகுதியில் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் மைத்திரி அரசு ஈடுபடுகிறது: ரவூப் ஹக்கீம்