Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டவிரோதக் குடியேற்றத்தைத் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் ஒன்றிணைந்த தேசிய கொள்கை வகுக்கப்படும் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 29வது அமர்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது. அதில் இலங்கை சார்பில் ஆரம்ப உரையை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குடியேற்றகாரர்களை ஆட்கடத்தல்காரர்களினால் பாதிப்புக்குள்ளானவர்களாக கருதும் இலங்கை, அனைத்து சட்டவிரோத குடியேற்றம், ஆட்கடத்தல், கடத்தல் ஆகியவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் இலங்கை விழிப்புணர்வுடனேயே செயற்பட்டு வருகின்ற போதிலும், அதனுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து சற்று வித்தியாசமாக கையாளும் நோக்கில் ஒன்றிணைந்த தேசிய கொள்கையொன்றை நிறுவ தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குடியெற்றவாசிகளுக்கான நலன்புரி செயற்பாடுகளுக்கு மேலதிக சக்தி மற்றும் வளங்களை பெற்றுத் தருவதாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு கடந்த மே மாதம் விஜயம் செய்திருந்த குடியேற்றவாசிகளின் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவர் பிரான்சிஸ் கிரேப், இலங்கை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்றை முன்வைத்ததை தொடர்ந்தே இலங்கைக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க பதிலளித்து உரையாற்றினார்.

பிரான்சிஸ் கிரேப் மே 19 முதல் 26 வரை இலங்கையில் தங்கியிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் அவர் சிவில் சமூக அமைப்புக்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்கள் ஆகியோரை சந்தித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்க தேசிய கொள்கை: ரவிநாத் ஆரியசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com