Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பையில் எச்சில் துப்பினால் அபராதமும் தண்டனையும் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

மும்பை நகரைத் தூய்மைப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அம்மாநில அரசு. இதுக்குறித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை நகரில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டு நாட்கள் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இரண்டாவது முறை துப்பினால், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் இப்படியாக இரண்டு முறைக்கு மேல் துப்பினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம், 5 நாட்கள் சமூகப் பணி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூகப் பணி எனும்போது அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலங்களில் துப்புரவு பணி உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மும்பையில் எச்சில் துப்பினால் அபராதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com