தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்குவதில் கவனம் செலுத்துவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பால் குளிர்பதன கிடங்கு, பால் குளிர்பதன லாரிகள் ஆரம்ப அளவில் இருந்ததைப் போலவே அதே எண்ணிக்கையில் உள்ளன. குளிர்ப் பதன கிடங்குகள் மற்றும் லாரிகளை அதிகப்படுத்த வேண்டுமே என்கிற மெத்தனப் போக்கில் கையாலாகாத அரசாக தமிழக அரசு பால் கொள்முதல் செய்வதில் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கால் நடைகள் வளர்ப்பில் ஆர்வம் காண்பிப்பதில்லை.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் மட்டும் பால் உற்பத்தி விவகாரத்தில் பின் தங்கி இருப்பது என்பது, கவலை அளிப்பதாக இருந்தாலும்,தமிழக அரசு இதைக் கண்டுக்கொள்வதில்லை.இந்நிலை நீடித்தால் இனி வரும் காலங்களில் குழந்தைகளுக்கு கூட ஊட்டச்சத்து மிக்க பாலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்றும் விஜயகாந்த் கவலை தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்குவதில் கவனம் செலுத்துவதில்லை: விஜயகாந்த்