முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, அவரது அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தவிர்ந்த ஏனைய குற்றச்சாட்டுக்களில் கைது செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளான பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், நிதி மோசடிப் பிரிவுப் பணிப்பாளர் தவிர்ந்த ஏனைய அதிகாரிகளினால் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன்னைக் கைது செய்வதை தவிர்க்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்கும் போதே உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர மற்றும் சரத் த ஆப்ரூ ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இதன்படி ‘அவன்காட்’ மிதக்கும் ஆயுதக் களஞ்சியம், மிஹின் லங்கா நிறுவனத்துக்கு விமானங்களைப் பெற்றுக்கொடுத்தமை, லங்கா ஹொஸ்பிடல் பங்கு கொடுக்கல் வாங்கல், விமானப் படைக்கு மிக் விமானங்கள் கொள்முதல் போன்ற மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவிர்ந்த வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய முடியும்.
மனுதாரரான கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பாக நடாத்தப்படுகின்ற அல்லது நடாத்துவதற்கு உத்தேசித்துள்ள வேறு விசாரணைகள் தொடர்பாக இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு செல்லுபடியாகாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to கோத்தபாயவை கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம்