சீனாவில் சார்ந்திருக்கும் வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை மீளாய்வு செய்யும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சீனா உட்பட சகல நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் சம நிலையான இராஜதந்திரக் கொள்கைகளை இலங்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர, HNK செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் கீழ் ஊழல்கள் அதிகம் காணப்பட்டமைக்கு சீன உதவி வழிவகுத்தது. கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தை இலங்கை நிறுத்தி வைத்து, அதனை மதிப்பாய்வு செய்து வருகின்றது. இந்த செயற்றிட்டம் சரியான செயன்முறைகளை கடைப்படித்ததா என்பது கேள்விக்குறியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலக யுத்தத்தின் சாம்பலிலிருந்து ஜப்பான் புத்துயிர் பெற்று அபிவிருத்தியடைந்து, உலகின் சக்தி மிக்க நாடுகளில் ஒன்றாகியுள்ளது. ஜப்பானிடமிருந்து இலங்கை படிக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உறுதியான நட்பு நாடாகவுள்ள ஜப்பான், இலங்கைக்கு மேலும் உதவிகளையும் வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் வழங்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Responses to சீனாவிடமிருந்து இலங்கை விலகும்?: மங்கள சமரவீர