Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த மகிந்த ராஜபக்ச 135 மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விசாரணை நடத்துவதற்காக ஆறு மாதங்களுக்கு பெற்றுக்கொண்ட வெளிநாட்டு நிபுணர்களின் உதவி மற்றும் அந்த பணியில் ஈடுபட்ட நபர்களுக்காகவே இவ்வளவு தொகை செலவிட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவர் அல்லது இரண்டு பேரிடம் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள 55 ஆயிரம் பவுண்களுக்கு மேல் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் தமது நற்பெயரை மேம்படுத்தி கொள்ள சர்வதேச மக்கள் தொடர்பு நிறுவனங்களுக்கு 200 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பணம், தொம்சன் ஹெட்வைசரி குரூப், போல்ட்வே கவர்ன்மண்ட் ஸ்டெடஜீஸ் மற்றும் லிபர்டீஸ் இண்டர்நேஷனல் குரூப் ஆகிய சர்வதேச மக்கள் தொடர்பு நிறுவனங்களுக்கே செலவிடப்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் கடந்த அரசாங்கம், நாட்டு பொதுமக்களின் பணத்தை செலவிட்டு சர்வதேச நிபுணர்களின் உதவிகளை பெற்றுக்கொண்டதே தவிர, நட்பு நாடுகள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வழங்க விருப்பிய சேவைகளை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to போர்க்குற்றத்தில் இருந்து தப்புவதற்கு 13 கோடி ரூபாவை செலவிட்ட மகிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com