Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வேட்புரிமை வழங்கப்பட்டால் பொதுத் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் சந்திரிக்கா கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி, பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்களுடன் இக்கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு முன் நின்றவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக தீர்மானித்ததும் சந்திரிக்கா குமாரதுங்க என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தேர்தலில் போட்டியிடுவதாக இன்று அறிவித்திருந்தார்.

எனவே இவ்வாறான ஒரு நிலையின் கீழ் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புரிமை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தால்,

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரத்தை கொண்ட கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய இணக்கம் வெளியிட்டிருந்தது.

எப்படியிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி தனியாக தேர்தலில் போட்டியிடுவதற்கே இதுவரையில் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தேர்தலில் மஹிந்தவை எதிர்கொள்வது எப்படி? சந்திரிக்கா மந்திராலோசனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com