Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளாது என்று கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா கூறியுள்ளதாவது, “தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பலத்தை கொண்டு பேச்சுக்களை நடத்தி மூன்று தொடக்கம் ஆறு மாத காலத்குக்குள் தீர்வு பெறப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வெற்றியை பெறுவதன் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க எதிர்வரும் தேர்தல் வழிசமைக்கும் என சர்வதேச சமூகம் நம்புகின்றது.

தேசிய அரசியலுக்கு ஆதரவு அளிப்பது என்பது ஒன்று. அமைச்சரவையில் சேருவது என்பது இன்னொன்று. நாங்கள் எப்பவுமே அமைச்சரவையில் சேர மாட்டோம் அதற்கான சந்தர்ப்பம் வராது.

மஹிந்த ராஜபக்ஷ குடும்பம், குடும்ப ஆட்சி மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக குற்றசாட்டுகள் உள்ளன. அத்துடன் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர். அவர் அவ்விடயங்களில் இருந்து தப்புவதற்காவே ஜனாதிபதி தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

மஹிந்தவுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான இடம் கிடைக்குமா என்பது சர்ச்சைக்கு உரியதாகவும் குழப்பமாகவும் உள்ளது. சுதந்திர கட்சி பிளவுபட்ட நிலையில் தேர்தலில் பங்குபற்றுவதற்காக சந்தர்ப்பங்கள் உள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி ஒன்றிணைந்து அவர்கள் பெருபான்மையை பெறாத போது தமிழ் மக்களின் ஆதரவை பெற வேண்டிய நிலை ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு, அகதி வாழ்வுக்கு தீர்வு, நில பிரச்சனைக்கு தீர்வு மீள் குடியேற்ற பிரச்சனை, சிறையில் உள்ளவர்களை விடுவித்தல், போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ள முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் த.தே.கூ அங்கம் வகிக்காது: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com