Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையுடன் வரும் பொதுத் தேர்தலை வெற்றி கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 08ஆம் திகதி மக்களிடம் பெற்றுக்கொண்ட ஆணையை மீண்டும் முன் வைத்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப மக்கள் ஆணையைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கட்சிகள் கடந்த காலங்களைப் போல் மோசடிகளையும் திருட்டுக்களையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் குடும்ப ஆட்சியை மீண்டும் பலப்படுத்தவுமே முனைகின்றன. நாம் தூய்மையான ஆட்சி நடத்தவே மக்கள் ஆணையை கோருகின்றோம். அனைத்து அமைச்சர்களுக்கும் நாம் விசேட வேண்டுகோள் விடுக்கின்றோம். அமைச்சின் வாகனங்கள் வளங்களைத் தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதே அந்த வேண்டுகோள். நல்லாட்சியைக் கருத்திற்கொண்டதாக செயற்பாடுகள் அமைவது அவசியம் என்றும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாகவும், எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்கி ஆட்சியமைக்க மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரியுள்ளார்.

0 Responses to மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தை வெற்றிகொள்வோம்: ரவி கருணாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com