முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் மீள் பிரவேசத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அவர் அரசியலில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அந்தக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரில்வின் சில்வா தெரிவித்துள்ளாவது, “எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், அவரது ஆசனத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக்கொள்ள மாட்டார். ஏனெனில், அவருக்கு எதிராக பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. நீதிமன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதன் பின்னர் அவரினால் தொடர்ந்தும் பாராளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ நீண்ட காலத்திற்கு அரசியலில் நிலைத்திருக்க மாட்டார்: ஜே.வி.பி