Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்குவது தொடர்பில் அக்கூட்டமைப்பில் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கையெழுத்தோடு வெளியான அறிக்கைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விடயத்தை சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் சோபித தேரரிடமே ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாக தெரிகின்றது

கடந்த வெள்ளிக்கிழமை மாலை சோபித தேரரை நேரில் சந்திக்க வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியூடாக அழைத்திருக்கின்றார்.

எனினும், சுசில் பிரேமஜயந்த வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் மனமுடைந்திருந்த சோபித தேரர், “இனி உங்களைச் சந்திப்பதில் அவசியம் இல்லை; நீங்கள் எனக்கு அறிவிக்காமல் உங்களுக்கு விரும்பியதையே செய்தீர்கள்” எனக் கூறி ஜனாதிபதியின் அழைப்பை அவர் நிராகரித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு தொலைபேசியூடாக பதிலளித்த ஜனாதிபதி, “சுசில் பிரேமஜயந்தவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” எனக் கூறியுள்ளதாக செய்திள் வெளியாகியுள்ளன.

0 Responses to மஹிந்தவுக்கு ஐ.ம.சு.கூ.வில் வேட்புமனு; சுசிலின் அறிக்கைக்கும் எனக்கும் தொடர்பில்லை?: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com