ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களின் ஆணையை மீற மாட்டார் என்று முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய, ஓபேசேகரபுர பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்களைத் தெளிவூட்டும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் வீட்டில் சூழ்ச்சியொன்று இடம்பெற்றுள்ளமை குறித்து முழு நாட்டு மக்களும் அறிவார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என கூறுகின்றார். மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடிப்பதற்காக காலை முதல் இரவு வரை பணியாற்றுகின்றார். மைத்திரிபால சிறிசேனவிற்காக வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கு மைத்திரிபால சிறிசேன தீங்கு விளைவிக்க மாட்டார் என நான் இன்னும் நம்புகின்றேன். அவர் மீது நான் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to சுசிலின் வீட்டில் சூழ்ச்சி; மைத்திரி மக்களின் ஆணையை மீறமாட்டார்: ஹர்ஷ டி சில்வா