மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தற்போதைய தலைவரான மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும், தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளாது நடுநிலை வகிக்கப்போவதாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கூட்டமொன்று மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலோடு தற்போது (இன்று புதன்கிழமை) கொழும்பில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்குவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to மஹிந்தவை மீண்டும் ஐ.ம.சு.கூ.வின் தலைவராக்கும் முயற்சி?