தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ம் திகதி முதல் பேருந்து நிலையங்களில், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைத்துத் தரப்படும் என்று, தமிழக முதல்வர ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த தனி அறைகள் பேருந்து நிலையங்கள்,பேருந்து பணி மனைகள், பேரூராட்சி, நகராட்சி பேருந்து நிலையங்களில் அமைத்துத் தரப்படும் என்று முதல்வர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் பேருந்து நிலையங்களில் சில மணித் துளிகள் அல்லது குறைந்தது அரை மணி நேரம் என்று காத்திருக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, தாய்ப்பால் ஊட்டும் மகளிருக்காக இந்த நலத்திட்டத்தை தமிழக அரசு துவக்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

0 Responses to பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள்: ஜெயலலிதா