மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் தோல்வியடைவார் என்கிற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றினை பொய்யாக்கி பெருவெற்றி பெறுவோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்புமனு வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி பொதுத் தேர்தலில் தோல்வியடைவார் என்றும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது பதிலுரைத்த சுசில் பிரேமஜயந்த, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் எம்மிடம் கேட்கக் கூடாது. அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் அன்றும், இன்றும் ஒரே கருத்தைக்தான் கூறுகின்றேன். அதுதான் அரசியல் தலைமைத்துவத்துக்கு அழகு.
எனினும், ஜனாதிபதியின் அறிவிப்பை ஆசிர்வாதமாகவே நாம் கருதுகின்றோம். மகிழ்ச்சிடைகின்றோம். தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஊக்கம் எமக்குக் கிடைத்துள்ளது. மஹிந்த தோற்க மாட்டார். நாம் வெற்றிபெறுவோம். வெற்றிபெறுவதற்காகத்தான் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஜனாதிபதி சுயாதீனமாக செயற்பட்டால் போதும்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த வெற்றி பெறுவார்; மைத்திரியின் கருத்தை பொய்யாக்குவோம்: சுசில் பிரேமஜயந்த