ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக தன்னை நியமிப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது ஏமாற்றிவிட்டனர் என்று முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் தன்னை தேசியப்பட்டியலில் நியமிப்பதாக வாக்குறுதியளித்திருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோர் அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என என்னிடம் உதவி கோரினர். நாட்டுக்காக அந்த நேரத்தில் நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அப்படிப்பட்ட தியாகங்களைச் செய்துள்ள என்னை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது.” என்றுள்ளார்.

0 Responses to வாக்குறுதியளித்து ஏமாற்றிவிட்டனர்: விநாயகமூர்த்தி முரளிதரன்