கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதற்காக, யாழ் தேர்தல் மாவட்டத்தில் கட்டுப்பணத்தினை நேற்று வியாழக்கிழமை செலுத்தியுள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் அனந்தி சசிதரன் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், அவருக்கு வேட்புமனு வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையிலேயே, அவர் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அனந்தி சசிதரன் சுயேட்சையாக போட்டி!