Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டு மக்களின் அழைப்பை ஏற்று பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். எனினும், அவர் எந்தக் கட்சியில் போட்டியிடவுள்ளார் என்கிற அறிவிப்பை வெளியிடவில்லை.

தங்காலை மெதமுலனையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பௌர்ணமி தின தர்மதேசனை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், அங்கு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு நாட்டு மக்கள் விடுத்த கோரிக்கையை நான் நிராகரிக்கமாட்டேன். நாட்டுக்காகவும் தாய் மண்ணுக்காகவும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை, நான் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன். அந்த அடிப்படையில் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடுவேன்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டு மக்களின் அழைப்பை ஏற்று பொதுத் தேர்தலில் போட்டி: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com