நடிகர் ராதாரவி நடிகர் சங்கத் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை விதிக்க விஷால், கார்த்தி, பொன்வண்ணன்,கருணாஸ் உள்ளிட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்ததே காரணம் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் நடிகர் ராதா ரவி, நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருக்கும் இடைக்காலத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு இன்று அவசர மனுவாக நீதிபதிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வரும் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to நடிகர் ராதா ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு!