Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த காலங்களில் பலமுறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் 6 நாட்கள் நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். எனினும், பொதுமன்னிப்பின் கீழ் அல்லது பிணையின் மூலம் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளையடுத்து அவர்கள் போராட்டத்தை நவம்பர் 07ஆம் திகதி வரையில் பிற்போட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அமைச்சரவை அனுமதியளிக்கவில்லை. அத்தோடு, பிணை வழங்க நீதிமன்றமும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நவம்பர் 08 முதல் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com