Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல் காலங்களில் துணை இராணுவக்குழுவான கருணா குழு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளமை தொடர்பில், தான் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் கருணா குழு தான் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, கருணா நேரடியாக கடத்தல்களில் ஈடுபட்டுள்ளார் என்று குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டதில் கருணா குழு ஈடுபட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?'' என்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே கருணா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, "தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து விலகி நான் இந்தியா மற்றும் இலண்டனில் தங்கியிருந்தேன். இந்தக் காலகட்டத்தில் என்னுடைய பெயரைப் பயன்படுத்தி சிலர் ஆட்கடத்தல், கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆட்கடத்தல், கொலை தொடர்பில் இன்று பலர் கைதுசெய்யப்படுகின்றனர்.

இதிலிருந்து மக்கள் ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, எவர் ஆட்கடத்தல், கொலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது. நான் இலண்டனில் கைதுசெய்யப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகத்தான் செயற்பட்டேன். என் மீதான இவ்வாறான குற்றச்சாட்டுகளில் எது உண்மை என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எனினும், நான் ஐக்கிய நாடுகளின் விசாரணையை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளேன்.

தமிழ் மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் மாற்றுப் பலமான தமிழ்க் கட்சி ஒன்று தேவை. அதனால்தான், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைவதற்கு எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to கடத்தல்களில் கருணா குழு ஈடுபட்டிருக்கலாம்; கருணா ஈடுபடவில்லை: கருணா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com