வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பில் சீராக கொள்ளையொன்று வகுக்கப்பட வேண்டும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருக்கும் முஸ்லிம்களுக்கும், அங்கு ஏற்கனவே வசித்த மக்களுக்கும் இடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமொன்றை வகுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஏதிலிகளாக புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் 25 வருடங்களுக்கு மேலாகவும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எவரும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை.
முஸ்லிம்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்த ஆறு வருடங்கள் கடந்துள்ளபோதும் அங்குள்ள மக்களின் மீள்குடியேற்றம் பற்றிக் கதைக்கப்படுகின்றது. ஆனால் 25 வருடத்துக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எவரும் கதைப்பதில்லை.
வடுக்களை ஆற்றும் செயற்பாடுகளின் போது இந்த மக்கள் உள்வாங்கப்படு வதில்லை. அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதாயின் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சீரான கொள்கையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அல்லாவிட்டால் வடக்கு முஸ்லிம்கள் தங்கியிருக்கும் பகுதியில் ஏற்கனவே வசித்துவந்த சமூகத்தினருடன் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது அவசியமானது.
வடக்கு மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களுக்காக உதவிகளைப் பெறுவதற்கான மாநாடொன்றை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. இதில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் நல்லிணக்கம் பற்றிப் பேசப்பட்டுவரும் சூழலில் இனங்கள் ஒருவரையொருவர் மரியாதையாக நடத்துவதுடன், அவர்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சீரான கொள்ளை வகுக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்