டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மீது அந்த மாநில அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
டெல்லியில் அதிகாரிகளை மாற்றம் செய்த விவகாரத்தில் ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடையே பனிப்போர் உருவாகி உள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப் படியே மாநிலத்தில் அதிகாரிகள் இடமாற்றம் நிகழ்ந்தது என்கிற நஜீப் ஜங் விளக்கத்தை கெஜ்ரிவால் ஏற்பதாக இல்லை.
இந்நிலையில் நேற்று டெல்லி அமைச்சரவை கூடி, ஆளுநர் நஜீப் ஜங் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.என்னதான் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனை கேட்காமல் ஆளுநர் நடந்துக்கொண்டது தவறுதான் என்பது கெஜ்ரிவாலின் வாதம்.

0 Responses to டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மீது மாநில அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானம்