ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து செல்லவுள்ளார்.
இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் அரசியல் மற்றும் கலாசார இணைப்பை ஏற்படுத்தி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி, தாய்லாந்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயம் நான்கு நாட்கள் கொண்டதாக அமையவுள்ளது.
தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயூட் சான் ஓ சாவின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்தின் மகாராணியார் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
குறிப்பாக இருநாட்டு பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல், இதன்போது முக்கியத்துவம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, தபால் தலையொன்று வெளியிடப்படவுள்ளதோடு, இலங்கையின் வரலாற்று சின்னங்களும் அங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 Responses to ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பயணம்!