Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரை மாற்றுமாறு கோரப்பட்டுள்ளது உண்மை. ஆனால், அந்தக் கோரிக்கை தன்னிடம் விடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாண அமைச்சர்கள் சிலரை மாற்றுமாறு சிலர் கோரிக்கைகள் விடுத்திருப்பது உண்மை. ஆனால், நேரடியாக என்னிடம் எந்தவிதமான கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை.

அமைச்சரவையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால், அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் அல்லது அமைச்சர்கள் மீது ஏதாவது குற்றங்கள் இருப்பின் அதனை என்னிடம் தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் குற்றங்கள் ஏதாவது இருப்பின், அவற்றினை அறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண அமைச்சர்களை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com