Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய அரசாங்கம் முன்வைத்துள்ள 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது காட்டாறு வெள்ளம் போன்றது. இதனால் பாரிய அழிவே ஏற்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலங்களை காணிச் சந்தையில் முழுமையாக விற்பனை செய்வதற்கான வாய்ப்புக்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதற்கான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அவர்களுக்கான வரிகளை நீக்கி நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கான யோசனைத் திட்டங்களே வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் கருத்து வெளியிடும் போதே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த வரவு செலவுத் திட்டம் ஒருபோதும் நாட்டை புதியதொரு திசைக்கோ அல்லது புதியதொரு ஸ்தானத்துக்கோ கொண்டு செல்லப்போவதில்லை. மீனவர்கள், விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை தொல்பொருள் முக்கியத்துமான இடத்துக்குக் கொண்டு செல்லும் வகையிலேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் உள்ள விடயங்களை தனித்தனியாகப் பார்க்கும்போது சிறுசிறு நல்ல விடயங்கள் காணப்படுகின்றபோதும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு அங்குலத்துக்கேனும் நகர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to காட்டாறு வெள்ளம் போன்றது தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்: அநுரகுமார திஸாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com