தேசிய அரசாங்கம் முன்வைத்துள்ள 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்கும் போர்வையில் பல முக்கிய சலுகைகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “தேசிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அவர்களது பொருளாதாரக் கொள்கை தெளிவாகியுள்ளது. தனியார் துறையை நோக்கிச் செல்லும் இப்பயணமானது நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையும்.
அரச தரப்பினர் பழைய விடயங்களைக் குறிப்பிட்டு குறிப்பிட்டு தமது தவறுகளை சரிசெய்யப் பார்க்கின்றனர். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டாது தமது நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுக்க வேண்டும்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளின் நிலையான நெல் விலை இல்லாது செய்யப்பட்டுள்ளது. அரச தொழில்களில் புதிதாக இணைபவர்களது ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. நாட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to மக்களுக்கு பயனற்ற வரவு செலவுத் திட்டம்: மஹிந்த