Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பாஜக தலைவர் அமித் ஷா அனுப்பி வைத்ததன் காரணமாக பாஜக சார்பில் தமிழகத்தில் வெள்ளத்தால் பதிகப்பட்ட இடங்களில் பாஜக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. அதன் படி நேற்று மற்றும் நேற்றைய முன்தினம் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் வெள்ளத்தால் பாதிக்கப்பட இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று டெல்லியிலிருந்து நிர்மலா சீதாராமனும் சென்னை வந்துள்ளார். அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக சார்பில் ஒரு கோடிரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என்று கூறினார்.

அடுத்து கிழக்குத் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரரஜனுடன் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் நிர்மலா சீதாராமன். பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கடலூர் சென்று அங்கு பாதிப்புக் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to நிர்மலா சீதாராமன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com