புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தி கொள்ள முடியவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார மேடைகளில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடக சுதந்திரம், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சுமுகமான உறவுகளைப் பேணுதல் போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வாழ்க்கைச் செலவு குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பொதுமக்கள் எவ்வித நன்மையையும் அடையவில்லை. நேரம் விரயமாகின்றது. துரித கதியில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை: சரத் பொன்சேகா