Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

காந்தியவாதி சசிபெருமாள் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர் கன்னியாகுமரியின் உண்ணாமலை நகரில் உள்ள ஒரு மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று, கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் போதே அவர் உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சசி பெருமாளின் மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கை இன்று நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது, சசி பெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறும்போதே கழுத்தில் கயிறுடன் ஏறினார் என்றும், உச்சியில் அவர் மயங்கிய நிலையில் அந்த கயிறு அவரின் கழுத்தை இறுக்கியே அவர் உயிரிழந்தார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை தேவையில்லை என்றும், சசி பெருமாள் குறித்த மரண விசாரணை அறிக்கையை கன்னியாகுமரி காவல்துறை அதிகாரி மற்றும் திருநெல்வேலி காவல்துறை அதிகாரி இருவரும் 3 மாதத்துக்குள் விசாரித்துத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவுப் பிறப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

0 Responses to சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை அவசியம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com