அவன்கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய முடியும் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருந்த விசாரணை அறிக்கையின் மூலம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கைது செய்ய முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்திகம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவன்கார்ட் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியக் கப்பல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பலரும் எடுத்துக்கூறியிருந்தோம். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பிக்க ரணவக்க, அஜித் பெரேரா, நான் உட்பட அவன்கார்ட் விடயம் சம்பந்தமாக வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்டோம்.
இந்த விடயம் சம்பந்தமாக இருவர் பாராளுமன்றத்தில் பேசியுள்ளனர். அதனை முற்றாக நிராகரிக்கின்றோம். அது அரசின் கருத்து அல்ல. அவர்கள் கூறியுள்ள கருத்துகள் அமைச்சரவை சம்பிரதாயத்திற்கு எதிரானவை. அவன்கார்ட் விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை கைதுசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை உள்ளது.
தேசிய நிறைவேற்றுச் சபை கூடியபோது முதலாவது கட்டமாக அவன்கார்ட் பிரச்சினை தொடர்பிலேயே பேசினோம். சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கைதுசெய்ய நேரிடும் என்று சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள் தேசிய நிறைவேற்றுச் சபைக்குத் தெரியப்படுத்தினர்.
பின்னர் அடுத்த கூட்டத்தில் இவர்களைக் கைதுசெய்வதாகவும் உறுதியளித்திருந்தனர். எனினும், உறுதிமொழிக்கமைய அவர்கள் கைதுசெய்யப்படவில்லை. அதற்கு அடுத்தவாரம் மீண்டும் நிறைவேற்றுச்சபை கூடியபோது, ஏன் கைதுசெய்யப்படவில்லை என்ற வினாவை எழுப்பியிருந்தோம். இதற்குப் பதிலளித்த திணைக்கள உயர் அதிகாரிகள் தமிழ்மொழிமூல மொழிபெயர்ப்பு இதுவரை கிடைக்காததால் கைதுசெய்யவில்லை என்றும் அன்றைய தினம் பிற்பகல் கிடைத்தவுடன் கைதுசெய்யவோம் என்று கூறியிருந்தனர்.
இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்ட வாக்குறுதியும் மீறப்பட்டது. அதற்கடுத்த வாரமும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். இதற்குப் பதிலளித்த சட்டமா உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குற்றவியல் அல்ல இதுவொரு சிவில் விசாரணை என்று தெரிவித்தனர். பின்னர் அரச அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்தனர். அவன்கார்ட் விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உதவி வழங்குவதற்காக இரு அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்திருந்தார். அதில் ஓர் அமைச்சர் அவன்கார்ட் வழக்கில் ஆஜராகி விவாதித்திருந்தார்.
குறித்த அமைச்சர் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தில் ஆஜராவதைத் தடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார். இவை அனைத்தும் அறிக்கையிடப்பட்டவைகள். இவை அனைத்தையும் அறிந்துவைத்திருக்கிற படியினாலேயே நாங்கள் பேசுகின்றோம்.
எதிர்வரும் திங்கட்கிழமை அவன்கார்ட் விடயம் சம்பந்தமாக விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விடயத்தில் நாங்கள் மக்களை குழப்ப எத்தனிக்கவில்லை. மாறாக, உண்மைகளைக் கண்டறியவே பேசுகின்றோம்'' என்றுள்ளார்.

0 Responses to கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய முடியும்: ராஜித சேனாரத்ன