Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் (பரணகம ஆணைக்குழு) பலன்கள் ஏதும் இல்லை என்று காணாமற்போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள போதிலும், அதில் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் காணாமற்போனோரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பி.பி.சி.யிடம் கருத்து வெளியிட்டுள்ள காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் இதுவரை காலமும் காணாமற்போனவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் எதனையும் தெரிவிக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு என்று விசாரணை குழுக்களிடம சாட்சியமளித்தும், இறுதியில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

இறுதி மோதல்களின் போது அரசாங்கத்தின் உறுதிமொழியை நம்பி இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போயிருப்பவர்களின் உறவினர்களை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்ததே இல்லை என தெரிவித்த தாயார் ஒருவர், “இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மீண்டும் விசாரணை நடத்துவதில் எந்தவிதப் பயனும் இல்லை“ என்றுள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளில் பயன் ஏற்படாதபோது இனிமேலும் விசாரணை நடத்துவதில் பயன் கிடைப்பது சந்தேகமே என்று மற்றுமொரு தாயார் தெரிவித்துள்ளார்.

0 Responses to பரணகம ஆணைக்குழுவினால் பலன்கள் ஏதும் இல்லை; காணாமற்போனோரின் உறவினர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com