Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பை போலீசார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று, சோட்டா ராஜன் சிபிஐயிடம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹீமின் நெருங்கிய கூட்டாளி மற்றும் மிகப்பெரிய கடத்தல்காரர் என்று சொல்லப்படும் சோட்டா ராஜன் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இவரை இந்தியாவுக்கு அழைத்துவர நேற்று முன்தினமே இந்திய சிபிஐ இந்தோனேஷியா புறப்பட்ட நிலையில், நேற்று இந்தோனேஷியா அதிகாரிகள் முன்னிலையில் சோட்டா ராஜனிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

அப்போது தமக்கு மும்பை போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றும், அவர்களால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும்,என்கிற அச்சம் உள்ளது என்றும் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.எனவே, இதனால் தம்மை டெல்லியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சோட்டா ராஜன் சிபிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சோட்டா ராஜனிடம் விசாரணை செய்யும்போது இந்தோனேஷியாவுக்கான இந்திய தூதரும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது. முன்னதாக விசாரணைக்கு சிபிஐ அழைத்துச் செல்லும்போது அங்குள்ள ஊடகவியாளர்களிடம் பேசிய சோட்டா ராஜன் மும்பை போலீசாருக்கும், தாவூத் இப்ரஹீமுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், மும்பை போலீசார் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியதாகத் தெரிய வருகிறது.

0 Responses to மும்பை போலீசார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை:சோட்டா ராஜன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com