தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “பாராளுமன்றம் இந்த வாரம் கூடும் வேளை பல சட்டங்கள் கொண்டு வரப்படும். இத்தகைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இறுதி முடிவை எடுக்க வலியுறுத்தும்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
குறிப்பாக, ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு தொடர்பாக எம்மால் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும் அவர் தாய்லாந்து சென்றதால் அச்சந்திப்பு தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த வாரத்தில் அச்சந்திப்பு நடைபெறும்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பை வழங்குதல்தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் இந்த வாரம் பேச்சு: த.தே.கூ