மேகி நூடுல்ஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது என்று அதைத் தயாரித்து விற்பனைக்கு விடும் நெஸ்ட்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை செய்யப்பட்டது. மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ரசாயணப் பொருட்கள் கலந்துள்ளன என்கிற குற்றச்சாட்டே இதற்குக் காரணம். ஆனால், நெஸ்ட்லே நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேகி நூடுல்ஸில் அதிக அளவு ரசாயணம் இல்லை என்பதை நிரூபித்து மீண்டும் விற்பனையைத் துவங்கி உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மூன்றரை கோடி மேகி நூடுல்ஸ் பாக்கெட் விற்றுத் தீர்ந்துள்ளது என்றும், ஆன் லைன் விற்பனையிலும் மேகி நூடுல்ஸ் சாதனை படைத்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்ஸ் தடை அமலில் இருந்த போது, 40 லட்சம் விவசாயிகள் 10 ஆயிரம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்றும் நெஸ்ட்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 Responses to மேகி நூடுல்ஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது: நெஸ்ட்லே