Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரிலாவது சென்று பாரவையிட வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிதான் என்றாலும், கடலூர் மாவட்டத்தில் அம்மக்கள் சந்தித்துள்ள இழப்புக்கள் ஏராளம். இன்னமும் அங்கு இயல்பு வாழ்க்கை வந்தபாடில்லை. தமிழக அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுக்குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இளங்கோவன், நான்கு வருடங்களுக்கு முன்பு தானே புயலின் போதும் கடலூர் வெகுவாகப் பதிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது மழைக்காவது கடலூரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். ஆனால், தமிழக அரசு இதைச் செய்யத் தவறிவிட்டது.இதனால் இப்போதும் கடலூர் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அங்கு மக்கள் இன்னமும் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதை ஒரு முதல்வர் என்கிற முறையில் கடலூருக்கு ஹெலிகாப்டரில் சென்றாவது ஜெயலலிதா பார்வையிடலாமே என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு பணத்தைசெளவு செய்து ஹெலிகாப்டரில் செல்வது ஒன்றும் முதல்வருக்குப் புதிதல்லவே என்றும் இளங்கோவன் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to கடலூருக்கு முதல்வர் ஹெலிகாப்டரிலாவது சென்று பார்வையிட வேண்டும்: இவிகேஎஸ் இளங்கோவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com