தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட வேண்டிய பொறுப்பு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு உண்டு என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஹர்த்தாலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமது விடுதலை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் இருப்பவர்களை வடக்கு மாகாண முதலமைச்சர் நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் உண்ணாவிரதிகளுடன் உரையாடி விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது, “உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளால் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள். கைதிகளின் விடுதலைக்காகப் போராடவேண்டிய பொறுப்பு வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்டு என்பது அண்மைய ஹர்த்தால் மூலம் உணர்த்தப்பட்டிருக்கின்றது.
கைதிகளின் விவகாரம் தொடர்பில் உயர் மட்டங்களில் பலதரப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்தக் கருத்துப் பரிமாற்றங்களில் எட்டப்படுகின்ற தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே நாம் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்க முடியும்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கூடி கைதிகள் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயவிருக்கின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு முழுமையாக பொதுமன்னிப்புக் கொடுக்க முடியாது எனக் கருதும் நிலையில், அவர்களின் குற்றங்களை மனதில் எடுத்து அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை சிறையிலிருந்து விடுவித்து நன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்