Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பிக்குகளும் வாழ்ந்து வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பௌத்த சாசன அமைச்சு இது தொடர்பிலான கருத்துக் கணிப்புக்களை நடத்தவில்லை என்றும், குடிசன மதிப்பீட்டுப் புள்ளி விபரவியல் திணைக்களமே இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2012ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 470 தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ நந்தாராம என்ற பெயரில் அறநெறிப் பாடசாலையொன்று இயங்கி வந்ததாகவும், இதில் 80 தமிழ் சிறுவர்கள் பயின்று வந்ததாகவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையில் 20,000க்கும் அதிகமான தமிழ் பௌத்தர்கள் வாழ்கின்றனர்: கயந்த கருணாதிலக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com