Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் வொஷிங்டனில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பையடுத்து, அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தில் மங்கள சமரவீர உரையாற்றினார்.

அதன் போது, “இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பது ஜனாதிபதியின் கருத்து மட்டுமே. முன்னைய அரசாங்கத்தால் கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரமும், நம்பகத்தன்மையும் சீரழிக்கப்பட்டன. தற்போது நீதித்துறை சரியான பாதைக்குத் திரும்பியிருக்கிறது.

நம்பகத்தன்மையை பெறுவதற்கு அதற்கு சற்று காலஅவகாசம் தேவைப்படும். போர் குற்ற விசாரணை விடயத்தில், வெளிநாட்டு நீதிபதிகள், தடயவியல் நிபுணர்கள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்குத் தொடுநர்களின் பங்களிப்பு தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது. நாம் எல்லா வாய்ப்புகள் குறித்து கவனத்தில் கொள்கிறோம். நாம் அமைக்கும் நீதிமன்றம் நம்பகமானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவில்லை.

போரில் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். சிறுபான்மை தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏனைய தரப்புகளுடன் கலந்துரையாடப்பட்ட பின்னர், சிறப்பு நீதிமன்றத்துக்கான வரையறைகள் இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் முடிவு செய்யப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to ஜோன் கெரி - மங்கள சமரவீர சந்திப்பு; சிறப்பு நீதிமன்றில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com