Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு வாகன விபத்தில் சிக்கி வசீம் தாஜூதீன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வசீம் தாஜூதீனின் மரண விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர், அது படுகொலை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, குறித்த படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Responses to ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com